February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec கர்தினால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Quebec கர்தினால் Marc Ouellet மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

“F.” என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் செவ்வாய்க்கிழமை (16) தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

2010 ஆம் ஆண்டு Quebec நகரில் நடந்த ஒரு நிகழ்வில் Ouellet தன்னை பல தேவையற்ற தொடுதல் சம்பவங்கள் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Quebecகின் உயர் மறைமாவட்டத்திற்கு எதிரான ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கில் குறிப்பிடப்பட்ட மதகுரு உறுப்பினர்கள், மறைமாவட்ட ஊழியர்களின் பட்டியலில் அவரது பெயர் அடங்குகிறது.

கர்தினால் Ouellet திருத்தந்தை ஆவதற்கு முன்னோடியாக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment