Ontario மாகாணம் குறைந்த ஊதியம் பெறும் கல்வி தொழிலாளர்களுக்கு 2 சதவீத வருடாந்த உயர்வை முன்மொழிகிறது.
40 ஆயிரம் டொலருக்கு குறைவாக ஊதியம் பெறும் கல்விப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு சதவிகிதமும், ஏனையவர்களுக்கு 1.25 சதவிகிதமும் என உயர்வை நான்கு வருட ஒப்பந்தத்தில் வழங்க Ontario அரசாங்கம் முன்வந்துள்ளது.
கனேடிய பொது ஊழியர் சங்கத்துடன் பேரம் பேசும் வகையில் இன்று இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு நியாயமானது என கூறிய கல்வி அமைச்சர் Stephen Lecce இது ஸ்திரத்தன்மையை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து தாம் விரக்தியடைந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.