கனடாவில் வீடு விற்பனை தொடர்ச்சியாக ஐந்தாவது மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
June, July மாதங்களுக்கு இடையே தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீடு விற்பனை குறைந்துள்ளதாக கனடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் சமீபத்திய வீழ்ச்சி ஐந்து மாதங்களில் மிகச் சிறியது என கூறப்படுகிறது.
June மாதத்துடன் ஒப்பிடும்போது July மாதத்தில் வீடு விற்பனை 5.3 சதவீதம் குறைந்துள்ளதாக சங்கம் கூறுகிறது.
கடந்த மாதம் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 37,975 ஆகும்.
கடந்த ஆண்டு July மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 29 சதவீதம் குறைவாகும்.
அதேவேளை கனேடிய வீடுகளின் விலைகள் February மாத உச்சத்திலிருந்து July மாதத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.