கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு புதிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடைகிறது.
குரங்கம்மை, போலியோ போன்ற புதிய சுகாதார அச்சுறுத்தல்களை பரிசோதிக்கவும் அளவிடவும் கனடிய கழிவுநீரை சல்லடை போடுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam தெரிவித்தார்.
COVID தொற்றின் போது கழிவு நீர் கண்டறிதல் தொற்றின் பரவலைக் கண்காணிப்பதற்கான முக்கிய வழியாக மாறியது.