தேசியம்
செய்திகள்

கனடாவில் ஆயிரத்தை தாண்டிய குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள்

கனடாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை Ontario மாகாணத்தில் பதிவாகி உள்ளது.

புதன்கிழமை (10) நிலவரப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,008 ஆக உள்ளது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் மொத்தம் 478 தொற்றுக்களை Ontario பதிவு செய்கிறது.

Quebec மாகாணத்தில் 425 cases, British Columbiaவில் 85, Albertaவில் 16, Saskatchewan, Yukon ஆகிய மாகாணங்களில் தலா 2 என தொற்றுக்கள் பதிவாகின.

செவ்வாய்கிழமை நிலவரப்படி, Ontarioவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு குரங்கு காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார்.

Related posts

கனடா திரும்பும் பயணிகள் மீண்டும் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்

Lankathas Pathmanathan

Florida படகு வெடிப்பில் கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

அடமான மோசடி Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது?

Lankathas Pathmanathan

Leave a Comment