December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Conservative கட்சியின் தலைமை பதவியை Pierre Poilievre வெற்றி பெறவேண்டும் என கட்சியின் உறுப்பினர்கள் அநேகர் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

ஆனால் Jean Charest கனடியர்கள் பலராலும் விரும்பப்படும் தலைவராக உள்ளார் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Conservative வாக்காளர்களில் 44 சதவீதம் பேர் Poilievre  சிறந்த கட்சித் தலைவராக இருப்பார் என நம்புகின்றனர்.

அவரது பிரதான போட்டியாளரான முன்னாள் Quebec முதல்வர் Charest 17 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.

22 சதவீதம் பேர், ஐந்து வேட்பாளர்களில் யார் சிறந்த தலைவராக இருப்பார்கள் என தங்களுக்கு தெரியாது என இந்த கருத்துக்கணிப்பில்  கூறியுள்ளனர்.

புதிய தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்க 679 ஆயிரம் உறுப்பினர்கள் தகுதி பெற்றுள்ளதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

Related posts

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment