Ontario மாகாணத்தில் எதிர்கொள்ளப்படும் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தங்களை எளிதாக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Ford அரசாங்கத்தின் சிம்மாசன உரை செவ்வாய்க்கிழமை (09) நிகழ்ந்தது.
Ford அரசாங்கத்தின் சிம்மாசன உரையை Lieutenant Governor Elizabeth Dowdeswell நிகழ்த்தினார்.
சிம்மாசன உரை ஒரு புதிய சட்டமன்றக் கூட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
Progressive Conservative அரசாங்கம், சுகாதார கட்டமைப்பின் பங்குதாரர்களுடன் இணைந்து பிரச்சினையைச் சமாளிப்பதற்கான யோசனைகளை அடையாளம் கண்டு வருவதாகவும் இந்த சிம்மாசன உரை குறிப்பிடுகிறது.
ஆனால் மாகாணம் முழுவதும் எதிர்கொள்ளப்படும் சுகாதார கட்டமைப்பு பிரச்சனைக்கு புதிய தீர்வுகள் எதுவும் இந்த உரையில் வழங்கப்படவில்லை.