Ontario மாகாண அரசாங்கத்தின் 2022-23 ஆம் ஆண்டின் பற்றாக்குறை 18.8 பில்லியன் டொலர்களாக குறைகிறது.
Progressive Conservative அரசாங்கம் தமது 2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை (09) மீண்டும் தாக்கல் செய்தது.
அதில் Ontarioவின் 2022-23 ஆம் ஆண்டின் பற்றாக்குறை மூன்று மாதங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டதை விட 1.1 பில்லியன் டொலர்கள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய நிகர வருவாய் முழுமையாக பற்றாக்குறையை குறைக்க பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் Peter Bethlenfalvy கூறினார்.
செவ்வாய்க்கிழமை மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பெற்றோருக்கு மற்றொரு கொடுப்பனவை உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவுகள் முன்னர் 2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.