ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது கனேடிய அரசாங்கம் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
47 ரஷ்யர்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை வெளியுறவு அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (02) காலை அறிவித்தார்.
உக்ரேனியர்களுக்கு எதிராக யுத்த நடவடிக்கைகளுக்காக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது கனேடிய அரசாங்கம் இந்த பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அதேவேளை உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிப்பதற்காக கனடா 17 ரஷ்ய நிறுவனங்களை அதன் பொருளாதாரத் தடை பட்டியலில் இணைத்துள்ளது.
இந்த பட்டியலில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் புச்சாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்காக June மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.