வதிவிட பாடசாலைகளின் துஷ்பிரயோகங்களுக்கு போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (25) மன்னிப்பு கோரினார்.
கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
முதற்குடி மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த தீமைக்காக நான் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என போப் பிரான்சிஸ் தனது அதிகாரப்பூர்வ மன்னிப்பில் தெரிவித்தார்.
முதற்குடியினர் நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்ட பாப்பாண்டவரின் ஆறு நாள் கனடா பயணம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
ஞாயிறன்று Edmonton விமான நிலையத்தில் பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon, உள்ளிட்டவர்களுடன் தேவாலயங்கள், பழங்குடியினர், அரசியல் பிரமுகர்களால் பிரான்சிஸ் வரவேற்கப்பட்டார்.
திங்கட்கிழமை Albertaவில் Ermineskin முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்திக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் “வருத்தத்தக்க தீமை” என வதிவிட பாடசாலைகளின் துஷ்பிரயோகங்களுக்கு பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.
முதற்குடி சமூக உறுப்பினர்கள், வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரான்சிஸ், தனது மன்னிப்பை பின்பற்ற முறையான விசாரணைகளை வலியுறுத்தினார்.