தேசியம்
செய்திகள்

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன

இதன் மூலம் செவ்வாய்க்கிழமை (19) முதல் வெள்ளிக்கிழமை (22) உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

Ontarioவில் இப்போது 288 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன.

இந்த எண்ணிக்கை July 11ஆம் திகதி 133ஆக இருந்தது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரமே பெண் என Ontario பொது சுகாதார மையம் கூறுகிறது.

இதேவேளை monkeypox தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் Ontario மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா முழுவதும் 681 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் குறித்து அறிந்திருப்பதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை Ontario, Quebec மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

Related posts

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

தனது மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலத்திய முதல்வர் Ford!

Lankathas Pathmanathan

Leave a Comment