February 23, 2025
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என Pierre Poilievre அறிவித்துள்ளார்

அடுத்த மாத ஆரம்பத்தில் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தை நடத்தவுள்ளதாக வியாழக்கிழமை (21) Conservative கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் தலைமைப் போட்டியில் முன்னணியில் இருப்பவராகக் கருதப்படும் Poilievre, மூன்றாவது விவாதத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தலைமைத்துவ விவாதங்களில் வேட்பாளர்கள் பங்கேற்பது கட்டாயமாகும் என Conservative கட்சியின் விதிகள் கூறுகின்றன.

இல்லையெனில் வேட்பாளர்கள் அபராதத்தை எதிர்கொள்கின்றனர்.

Conservative கட்சியின் விதிகளுக்கு அமைய வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தலைமை விவாதங்களில் பங்கேற்கா விட்டால் $50,000 அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனாலும் Poilievre முதல் இரண்டு அதிகாரப்பூர்வ விவாதங்களில் பங்கேற்றார் என அவரது பிரச்சார குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

Related posts

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

உறுதிமொழி அறிவிப்புகள் நிறைந்த முதலாவது முழு நாள் தேர்தல் பிரச்சாரம்!

Gaya Raja

Liberal கட்சி தோல்வி – இணைந்தன எதிர்கட்சிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment