Ontarioவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (22) மீண்டும் குறையவுள்ளது.
April மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் இல்லாத அளவில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை குறையும் என தெரியவருகின்றது.
வெள்ளியன்று எரிபொருளின் விலை லிட்டருக்கு 174.9 சதமாக குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.
Toronto, Ottawa, Hamilton, London, Kitchener, Barrie, Niagara, Kingston, Windsor போன்ற நகரங்களில் இந்த விலை எதிர்வு கூறப்படுகிறது.
Montreal நகரிலும் வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை நான்கு சதத்தினால் குறைந்து லிட்டருக்கு 190.9 ஆக விற்பனையாகவுள்ளது.