தேசியம்
செய்திகள்

Ontario அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்

Ontario மாகாண அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

55 ஆயிரம் கல்விப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையிலான திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (18) ஆரம்பமாகியது.

ஆசிரியர்கள் உட்பட பிற பாடசாலை தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் August மாத இறுதியில் காலாவதியாகும் முன்னர், நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

ஆரம்ப, இடைநிலை, கத்தோலிக்க, French பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இந்த வாரம் மேலும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario!

Gaya Raja

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு

Lankathas Pathmanathan

Leave a Comment