கனேடிய மக்கள் தொகையில் சுமார் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.
கனடாவில் மீண்டும் COVID தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
Omicron மாறுபாட்டின் தோற்றம் இந்த அதிகரிப்புக்கு வழி வகுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதன் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் சுகாதார அமைப்பு கடும் சவாலுக்குள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் அவசர சிகிச்சை நிலையங்கள் மூடப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருவதால், உடனடி உதவிக்கான அழைப்பை மருத்துவர்கள் விடுகின்றனர்.