Nova Scotia மாகாணத்தின் முதல் மொழியாக Mi’kmaw மொழி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த புதிய Mi’kmaw மொழி சட்ட பிரகடனத்தில் மாகாண முதல்வர் Tim Houston, முதற்குடிகளின் தலைவர்கள் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தச் சட்டம் Mi’kmawவை மாகாணத்தின் முதல் மொழியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.
இந்த பிரகடனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முதற்குடிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
Mi’kmaw மொழிச் சட்டம் நல்லிணக்கத்திற்கான பாதையில் மற்றொரு முக்கியமான படியாகும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சட்டம் ஞாயிறன்று பிரகடனப்படுத்தப்பட்டாலும் April மாதம் மாகாண சட்டமன்றத்தால் முதலில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மொழி சட்டம் October 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.