தேசியம்
செய்திகள்

மீண்டும் உயரும் பாலின் விலை

கனடா முழுவதும் பால் பொருட்களின் விலை மீண்டும் உயர்கிறது.

கனடிய பால் ஆணையம் இந்த ஆண்டின் இரண்டாவது பால் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

September மாதம் 1ஆம் திகதி முதல் விவசாயிகள் பாலுக்கு, 2.5 சதவீதம் அல்லது லிட்டருக்கு இரண்டு சதங்கள் கூடுதலாக வசூலிப்பார்கள்.

பால் பண்ணையாளர்கள் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த February மாதம் பால் விலையை லிட்டருக்கு 8.4 சதவீதம் அல்லது ஆறு சதங்கள் அதிகரிக்க கனடிய பால் ஆணையம் அனுமதித்தது.

Related posts

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம்

Lankathas Pathmanathan

Paris Paralympics: பத்தாவது நாள் ஆறு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment