Ontario மாகாணத்தில் 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
York பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த இது குறித்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
June 2021 இல் ஆரம்பமான PROJECT ENTRUST என்ற போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் இந்த விசாரணையில் சந்தேக நபர்களுக்கு எதிராக 113 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Ontario முழுவதும் 19 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களும், 136, 000 டொலர் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.