தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்து கலந்துரையாட மத்திய அரசிடம் கோரிக்கை

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் கோருகின்றனர்.

கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) இரண்டாவது நாளாக British Colombia மாகாணத்தில் சந்தித்தது.

மத்திய அரசாங்கம், சிதைந்து வரும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து மாகாணங்கள், பிராந்தியங்களுடன் கலந்துரையாட வேண்டும் என British Colombia முதல்வர் John Horgan கூறினார்.

நிலையான, நீண்ட கால சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்கான கோரிக்கையை நிவர்த்தி செய்ய, முதல்வர்களைச் சந்திப்பதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்து எட்டு மாதங்கள் ஆகின்றன எனவும் Horgan நினைவுபடுத்தினார்.

சுகாதார அமைப்புகள் நெருக்கடியில் உள்ள நிலையில் மத்திய அரசு மாகாணங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முன்னதாக சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறியிருந்தார்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Gaya Raja

புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக Ontario முதல்வர் கருத்து!

Lankathas Pathmanathan

Leave a Comment