கடந்த வெள்ளிக்கிழமை எதிர்கொள்ளப்பட்ட சேவை நிறுத்ததினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் வரை சேவை கட்டணத்தை மீள வழங்க Rogers நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் சேவை தடைகளை எதிர்கொள்வதாக இன்று Rogers தலைமை அதிகாரி அறிவித்த நிலையில் சேவை கட்டண மீளளிப்பு குறித்த இந்த அறிவித்தல் வெளியானது
கனேடியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தொடர்ந்து செயல்படுவோம் என செவ்வாய்க்கிழமை (12) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Rogers நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சேவை நிறுத்தம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க Rogers நிறுவனத்தை CRTC உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் இந்த விளக்கம் வழங்கப்பட வேண்டும் என CRTC வலியுறுத்தியுள்ளது
எதிர்காலத்தில் இவ்வாறான செயலிழப்பை தடுக்க Rogers என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது உட்பட CRTC பல கேள்விகளை முன்வைத்ததுள்ளது.
கனடாவின் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் செயலிழப்புகளின் சேதத்தைத் தணிக்க ஒரு முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்த கனடாவின் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne பணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது