தேசியம்
செய்திகள்

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Via புகையிரத வேலை நிறுத்தம் இறுதி நிமிட ஒப்பந்தம் காரணமாக தவிர்க்கப்பட்டது.
Via புகையிரத நிறுவனம், Unifor Council 4000, Local 100  ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த தற்காலிக ஒப்பந்த இணக்கம் குறித்து செவ்வாய்க்கிழமை (12) காலை அறிவித்தனர்.

 

வேலை நிறுத்த காலக்கெடுவிற்கு சற்று முன்னதாக எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் காரணமாக, சுமார் 2,400 தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் நிலை தவிர்க்கப்பட்டது.

தொழிற்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டிய இந்த ஒப்பந்தம் January 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், December 31, 2024 வரை அமுலில் இருக்கும் எனவும் Via ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
தமது உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டவுடன் புதிய ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படும் என Unifor கூறுகிறது.

Related posts

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

Gaya Raja

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

Leave a Comment