தேசியம்
செய்திகள்

அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை நோக்கி கனடா செல்லும்

கனடா அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை (recession) நோக்கி செல்லும் என Royal வங்கி எதிர்வு கூறியுள்ளது.

ஆனால் இது குறுகிய காலத்திற்கு மாத்திரம் தொடரும் எனவும் முந்தைய சரிவுகளை போல் கடுமையாக இருக்காது எனவும் வியாழக்கிழமை (07) வெளியான RBCயின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

உணவு, எரிபொருள் விலைகள், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை பொருளாதாரத்தை மந்த நிலையை நோக்கி நகரத்து என RBC பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வேலையற்றோர் விகிதம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதத்தை எட்டும் என RBC எதிர்பார்க்கிறது.

எதிர்வரும் ஆண்டில் வீடுகளின் விலை 10 சதவீதம் குறையும் எனவும் RBC எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் கனடிய மத்திய வங்கி தனது முக்கிய கொள்கை விகிதத்தை 3.25 சதவீதமாக உயர்த்தும் எனவும் RBC எதிர்வு கூறுகிறது.

Related posts

Halifax நகரத்தின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவு

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்து பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

Lankathas Pathmanathan

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

Lankathas Pathmanathan

Leave a Comment