கனடாவின் பெரும்பகுதி முழுவதும் வியாழக்கிழமை (07) எரிபொருளின் விலை குறைந்துள்ளது.
Ontarioவின் பெரும் பகுதிகளில் எரிபொருளின் விலை 12 சதத்தினால் குறைவடைந்தது.
Toronto பெரும்பாகம், Ottawa, Hamilton, London, Barrie, Kitchener ஆகிய இடங்களில் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் சராசரி எரிபொருளின் விலை வியாழக்கிழமை 179.9 சதமாக விற்பனையாகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை Ontarioவின் எரிபொருளின் விலை 11 சதத்தினால் குறைவடைந்தது.
Vancouver, Montreal போன்ற நகரங்களில் எரிபொருளின் விலை ஒரே இரவில் சுமார் ஆறு சதங்கள் குறைந்துள்ளது.
Montreal நகரில் எரிபொருள் வியாழக்கிழமை 194.9 சதமாக விற்பனையாகிறது.