Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களால் இந்த முடிவு செவ்வாய்க்கிழமை (05) எடுக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு செவ்வாய் இரவு அவசரமாக கூடிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை அடுத்து Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு செவ்வாய் இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவினால் பெறப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த தகுதி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.
“சமீபத்திய வாரங்களில், கனடா தேர்தல்கள் சட்டத்தின் நிதி விதிகளை மீறியதாகத் தோன்றும் Patrick Brown பிரச்சாரத்தின் தீவிரமான தவறான குற்றச்சாட்டுகளை எங்கள் கட்சி அறிந்தது” என இந்த முடிவு குறித்து தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு தலைவர்
Ian Brodie ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த முடிவின் அடைப்படையில் Conservative கட்சியின் தலைமை தேர்தலில் Pierre Polievre, Leslyn Lewis, Scott Aitchison, Jean Charest Roman Baber ஆகியோர் போட்டியிடுகின்றனர்.