NATOவில் இணைவதற்கு பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக கனடா அமைந்துள்ளது.
பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (05) இதனை அறிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது NATO தலைவர்கள் இரு நாடுகளையும் கூட்டணியில் சேர அதிகாரப்பூர்வமாக அழைத்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
NATOவில் விரைவாகவும் திறம்படமாகவும் ஒருங்கிணைப்பதற்கும், கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும் பின்லாந்து, ஸ்வீடனின் திறனில் கனடா முழு நம்பிக்கை கொண்டுள்ளது என Trudeau ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் NATOவில் இணைவதற்கான ஆதரவைக் குறிக்கும் ஒரு பிரேரணையில் கனடிய நாடாளுமன்றம் கோடைக்கால விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.