சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக Ontario மாகாணத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
Ontarioவில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டது மாகாணத்தின் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகளை புதுப்பித்துள்ளன.
இந்த நிலையை எதிர்கொள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் Ontario அஅரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
Clinton நகராட்சியில் உள்ள ஒரு மருத்துவமனை, சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அதன் அவசர சிகிச்சைப் பிரிவை தற்காலிகமாக மூடியுள்ளது.
Kingston நகரின், மருத்துவமனை அதன் அவசர சிகிச்சை பிரிவின் ஊழியர்களை ஒருங்கிணைப்பதற்காக வார இறுதியில் அதன் அவசர சிகிச்சை மைய நேரத்தைக் குறைத்துள்ளது.
இந்த இரண்டு மருத்துவமனைகளும் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையை இதற்கு காரணம் காட்டியுள்ளன.
Perth, Smith Falls மாவட்ட மருத்துவமனையில் உள்ளூர் அவசர சிகிச்சை பிரிவு சனிக்கிழமையன்று மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாயிற்றும் ஊழியர்கள் COVID தொற்றின் பரவலை எதிர்கொள்ளும் நிலையில் அவசர சிகிச்சை பிரிவை வியாழக்கிழமை வரை அதை மூடி வைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.