கனடாவில் தமிழறிஞர் G.U. Pope அவர்களுக்கு நினைவுச் சிலை அமைக்கும் முயற்சி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
G.U. Pope தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியை நினைவுகூரும் முகமாக, அவரது இருநூறாவது பிறந்தநாளை ஒட்டி இந்த நினைவுச் சிலை எழுப்புவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
G.U. Pope பிறந்த Prince Edward தீவின் Bedeque என்ற இடத்தில் பத்து அடி உயரத்தில் இந்த நினைவுச் சிலை எழுப்புவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
கனடியத் தமிழர் பேரவை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இதில் உள்ளூர் வரலாற்று சமூகம், நகராட்சி, மாகாண அரசு ஆகியவற்றின் ஆதரவும் பெறப்பட்டுள்ளது.