Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்பும் உறுதிமொழியை வியாழக்கிழமை (30) கனடா வழங்கியது.
NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதன் மூலம் கனடா Latviaவில் தலைமை தாங்கி வரும் NATO போர்க்குழுவை மேம்படுத்தி பலப்படுத்துகிறது.
கனேடிய தலைமையிலான NATO போர்க்குழு 700 கனடியர்கள் உட்பட சுமார் 2,000 துருப்புக்களை கொண்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பைத் தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பாவை தளமாக கொண்ட எட்டு பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.