தேசியம்
செய்திகள்

கனடிய எல்லைக் கட்டுப்பாடுகள் September 30 வரை நீட்டிப்பு

கனடாவுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்த பட்சம் September மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

கனடாவிற்குள் நுழைவதற்கான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளும் September 30 வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசாங்கம் புதன்கிழமை (29) அறிவித்தது.

இதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

அதேவேளை தடுப்பூசி போடப்படாத கனேடியர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன்னர் COVID மூலக்கூறு பரிசோதனையை வழங்குவதுடன் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

அனைத்து பயணிகளும் தங்கள் தடுப்பூசி தகவல், பயண ஆவணங்களை ArriveCan செயலியில் பதிவேற்ற வேண்டும் எனவும் அரசாங்கம் கோருகிறது.

கனடாவுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள்இறுதியாக May மாதம் 31 ஆம் திகதி நீட்டிக்கப்பட்டன.

Related posts

Conservative கட்சியில் இணைய விரும்பும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment