February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கான காரணம் ரஷ்யா என பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கனடா, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு கூடுதலாக 250 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.

10 நாள் சர்வதேச நாடுகளுக்கான பயணமொன்றை ருவாண்டாவில் ஆரம்பித்துள்ள பிரதமர், இந்த உதவியை வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை முதல் பிரதமர் 53 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதில் பஞ்சத்தின் வேதனையை எதிர் கொள்ளும் நாடுகளின் தலைவர்களையும் Trudeau சந்திக்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை Trudeau சந்திக்கின்றார்.

Related posts

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து சாட்சியமளித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி

Lankathas Pathmanathan

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை: அமைச்சர் Dominic LeBlanc

Lankathas Pathmanathan

Leave a Comment