தேசியம்
செய்திகள்

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருளின் விலைகளால் இந்த உயர்வு தூண்டப்பட்டதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்துள்ளது.

May மாதத்தில் அதன் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டை விட 7.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்ந்து வரும் எரிபொருளின் விலை, கடந்த மாதம் நான்கு தசாப்தங்களில் வருடாந்த பணவீக்க விகிதத்தில் மிகப்பெரிய உயர்வை தூண்டியதாக புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை April முதல் May வரை 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறையின் முன்னர், நாடாளுமன்றத்தில் பணவீக்கம் குறித்த அவசர விவாதத்தை முன்னெடுப்பதில் Conservative கட்சி தோல்வி கண்டுள்ளது.

Related posts

Edmonton விபத்தில் இரண்டு சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள்

Lankathas Pathmanathan

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Gaya Raja

மூன்று புதிய Senatorகள் பிரதமரினால் நியமனம்!

Gaya Raja

Leave a Comment