December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (22) அறிவித்தது.

Quebecகில் 171, Ontarioவில் 33, Albertaவில் நான்கு, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

கனடா தனது முதலாவது monkeypox தொற்றை May மாதம் 19ஆம் திகதி பதிவு செய்தது

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்றை தடுப்பதற்காக IMVAMUNE தடுப்பூசி Health கனடாவால் கடந்த மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

செய்வாய்க்கிழமை வரை Quebecகின் சுகாதாரத் துறை 5,895 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

அதிக ஆபத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பதற்காக கடந்த வாரம் முதல் monkeypox தடுப்பூசி மையங்களை Toronto பொது சுகாதார மையம் நடத்தி வருகிறது.

Ottawa பொது சுகாதார மையம் புதன்கிழமை தனது முதலாவது monkeypox தடுப்பூசி மையத்தை நடத்தியது.

கனடாவில் இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் 20 முதல் 69 வயதிக்குற்பட்ட ஆண்கள் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Medicine Hat நகர முதல்வர் அதிகாரங்கள் குறைப்பு

Lankathas Pathmanathan

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவின் COVID தொற்றின் எண்ணிக்கை அடுத்த வாரம் ஒரு மில்லியனை தாண்டும்!

Gaya Raja

Leave a Comment