ரஷ்யா – உக்ரைன் மோதல்கள் முக்கிய மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் Justin Trudeau 10 நாள் சர்வதேச பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார்.
பிரதமர் Trudeau செவ்வாய்க்கிழமை (21) Rwanda பயணமாகின்றார்.
அங்கு 2018ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை Trudeau சந்திக்கவுள்ளார்.
இந்த கூட்டங்களில் உக்ரைனுக்கான ஆதரவை தெரிவிப்பதுடன் ரஷ்யாவைக் கண்டிக்கவும் கனடா திட்டமிட்டுள்ளது.
இந்த பயணத்தில் G7 உச்சி மாநாட்டிற்காக Trudeau ஜெர்மனி செல்லவுள்ளார்.
பின்னர் NATO உச்சி மாநாட்டிற்காக பிரதமர் Madrid பயணமாகிறார்.
July 1ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கனடா தினக் கொண்டாட்டங்களுக்காக Trudeau நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார்.