நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார்.
Toronto Pearson சர்வதேச விமான நிலையம் உட்பட விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் போராடி வருகின்றது.
இந்த தாமதங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள், சுங்க அதிகாரிகளின் பற்றாக்குறை காரணம் என விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதில் விமான நிறுவனங்களுக்கும் கடமை ஒன்று உள்ளது என அமைச்சர் Alghabra செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.
கடந்த April மாதம் முதல் விமான நிலைய பாதுகாப்பு நிறுவனம் 900க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்தி உள்ளதாகவும் Alghabra கூறினார்.