February 22, 2025
தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

அமைச்சர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.

துப்பாக்கி உரிமையை கட்டுப்படுத்தும் மசோதாவை சமர்ப்பித்த பின்னர், சமீபத்திய வாரங்களில் சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல்களுக்கு ஆளாவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் போது NDP தலைவர் Jagmeet Singh துன்புறுத்தப்பட்ட நிகழ்வும் பதிவானது.

இது போன்ற தொடர் அச்சுறுத்தல்கள், மிரட்டல் சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை காவல்துறையுடனும், நாடாளுமன்றப் பாதுகாப்புச் சேவைகளுடனும் இணைந்து மறு மதிப்பீடு செய்து வருவதாக அமைச்சர் Mendicino கூறினார்.

Related posts

Ontarioவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

மக்கள் கருத்துக்கணிப்பில் முன்னிலையில் உள்ள PC

Lankathas Pathmanathan

இங்கிலாந்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment