தமிழர்களுக்கான நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டுமென கனடிய அரசாங்கத்தை தமிழ் உரிமைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்த தமிழ் உரிமைக் குழுவின் மனுவை கனடிய நாடாளுமன்றத்தில் Calgary Forest Lawn தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jasraj Hallan சமர்ப்பித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞரின் அலுவலகத்திற்கு ரோம சாசனத்தின் 15வது பிரிவின் கீழ் வழங்கிய தனது தகவல் தொடர் பாடலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விண்ணப்பம் ஒன்றை தமிழ் உரிமைக் குழு கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை அங்கீகரித்த முதலாவது தேசிய நாடாளுமன்றமாக கனடா விளங்கும் நிலையில் தமிழ் சமூகத்தின் நீதிக்கான போராட்டத்திற்கு உதவ வேண்டுமென தமிழ் உரிமைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கற்பனா நாகேந்திரா தெரிவித்தார்.