பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறு உத்தேசித்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டும் திட்டம் ஒன்றை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland முன்வைத்துள்ளார்.
Torontoவில் உள்ள Bay Street Empire Clubஇல் வியாழக்கிழமை (16) உரையாற்றிய Freeland, ஏற்கனவே இருக்கும் அரசாங்கத்தின் உறுதி மொழிகளின் அடிப்படையில் இந்த திட்டத்தை அறிவித்தார்.
தனது உரையில் கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்தும், தகுதியான கனடியர்களுக்கு விரைவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான மத்திய அரசின் அடுத்த நடவடிக்கைகள் குறித்தும் Freeland குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 8.9 பில்லியன் டொலர்கள் உதவித் திட்டமும் அடங்குகின்றது.
இவற்றில் சில நன்மைத் திட்டங்களுக்கு திட்டமிடப்பட்ட ஊக்குவிப்புகள், மத்திய அரசின் குழந்தை, பல் பராமரிப்புத் திட்டங்கள் ஆகியவையும் அடங்குகின்றன.
தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்ய புதிய அரசாங்கச் செலவீனங்களை அறிவிக்க அரசாங்கம் திட்டமிடவில்லை எனவும் Freeland அறிவித்தார்.