கனடிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கான COVID தடுப்பூசி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் இடை நிறுத்தப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பார்வையாளர்களுக்கான தடுப்பூசி கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இடை நிறுத்தப்படுகின்றது.
அரசாங்கத்தின் சபை தலைவர் Mark Holland வியாழக்கிழமை (16) பிற்பகல் இதற்கான ஒரு பிரேரணையை முன்வைத்தார்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து இந்த பிரேரணை குறித்து விவாதித்தனர்.
இந்த நிலையில் வியாழன் நடைபெற்ற வாக்கெடுப்பில் தடுப்பூசி கட்டுப்பாடுகளை இடைநிறுத்துவதற்கு சபை ஏகமனதாக ஒப்புக்கொண்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகளை அரசாங்கம் விலத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.