உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்று Toronto , Vancouver ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
2026 FIFA உலகக் கோப்பைக்கான தளங்களாக Torontoவும், Vancouverரும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
உலகக் கோப்பைக்கான 15 தளங்களில் கனடிய நகரங்களில் Toronto, Vancouver ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளதாக FIFA வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
2026 உலகக் கோப்பைத் தொடர் கனடா தவிர அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன.