Ontarioவில் எரிபொருளின் விலை புதன்கிழமை (15) குறையும் என எதிர்வு கூறப்படுகின்றது.
புதன்கிழமை எரிபொருளின் விலை லிட்டருக்கு 207.9 சதமாக குறையும் என எதிர்வு கூறப்படுகின்றது.
இது தற்போது விற்பனையாகும் எரிபொருளின் விலையில் இருந்து ஐந்து சதம் விலை குறைவாகும்.
கடந்த வார இறுதியில், Toronto பெரும்பாகத்திலும், மேற்கு Ontarioவிலும் எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு சராசரியாக 215.9 சதமாக உயர்ந்தது.
கோடை மாதங்களில் எரிபொருளின் விலை லிட்டிற்கு 225 சதமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.