தேசியம்
செய்திகள்

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

அதிக குடும்பக் கடன் காரணமான ஏற்படக்கூடிய பொருளாதார ஆபத்து குறித்து கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை மத்திய வங்கி விடுத்துள்ளது.

வீட்டுக் கடன்களின் உயர்வு, அதிகரித்துவரும் வீடுகளின் விலைகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய பாதிப்புகளாக உள்ளன என மத்திய வங்கி அதன் வருடாந்த நிதி மதிப்பாய்வில் கூறியுள்ளது.

கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதங்களை முந்தைய இலக்கான 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்தத் தயாராக இருப்பதாக கடந்த வாரம் கூறியிருந்தது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் அடமானக் கொடுப்பனவுகள் 45 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் மத்திய வங்கி வியாழக்கிழமை (09) எச்சரித்துள்ளது.

Related posts

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்கள் COVID தொற்றுடன் சேவையாற்ற Quebecகில் அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment