February 22, 2025
தேசியம்
செய்திகள்

Barbados பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

சிறிய தீவு நாடுகள் மூன்று நெருக்கடியை எதிர்கொள்வதாக Barbados பிரதமர், கனடிய பிரதமருடனான சந்திப்பின் போது கூறினார்.
COVID தொற்றுக்கு மத்தியில் மூன்று நெருக்கடியை சமாளிக்க போராடும் சிறிய தீவு நாடுகளின் நிலை குறித்து Barbados பிரதமர் புதன்கிழமை (08) எடுத்துரைத்தார்.
Los Angelesசில் பிரதமர் Justin Trudeauவுடன் இருதரப்பு சந்திப்புக்கு முன்னதாக Barbados பிரதமர் Mia Mottley இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
COVID, எரிபொருள் – உணவு விலை உயர்வு, காலநிலை மாற்றம்  ஆகிய தாக்கங்களை Barbados கையாள்வதாக அவர் கூறினார்.
கனடாவுடன் நிலையான வளர்ச்சி இலக்குகளில் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாககூறிய அவர்,  தனது நாட்டின் வளர்ச்சியில் கனடா ஆற்றிய பங்கிற்கு Trudeauவுக்கு நன்றி தெரிவித்தார்.

Related posts

Francophonie உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்!

Lankathas Pathmanathan

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Gaya Raja

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

Gaya Raja

Leave a Comment