வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடிய பயணிகள் Monkeypox தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Monkeypox பரவலுக்கான அபாயம் இருப்பதால், வெளிநாடுகளில் பயணம் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடாவின் பொது சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதற்காக, இரண்டாம் நிலை பயண எச்சரிக்கை சுகாதார அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கனடாவில் குறைந்தது 97 பேர் Monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.