Manitobaவில் Sagkeeng முதற்குடி தேசத்தில் முன்னெடுக்கப்படும் தேடுதலில் 190 சாத்தியமான கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன.
முதற்குடி தேசத்தின் ஒரு பகுதியில் 137 சாத்தியமான கல்லறைகளும், மற்றொரு பகுதியில் 53 சாத்தியமான கல்லறைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக Sagkeeng முதற்குடி தேசத்தின் தலைவர் திங்கட்கிழமை (06) உறுதிப்படுத்தினார்.
இவை வதிவிட பாடசாலை மாணவர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்பதை தீர்மானிக்கும் பணிகள் தொடர்கின்றன.
இந்த வதிவிடப் பாடசாலை 1905ஆம் ஆண்டு கட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையால் வழி நடத்தப்பட்டது.
British Colombiaவில் கடந்த வருடம் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து Sagkeeng முதற்குடி தேசத்தில் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.