பலத்த இடியுடன் கூடிய மழை குறித்த சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை Toronto பெரும்பாகத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (06) வெளியிட்டுள்ளது.
திங்கள் இரவு பெய்யத் தொடங்கும் மழை, குறைந்தது செவ்வாய் மாலை வரை தொடரும் என இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 முதல் 50 மில்லி மீட்டர்கள் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் இன்னும் அதிகமாக மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வானிலை எச்சரிக்கையின் கீழ் Hamilton, Niagara, Halton, Peel, York, Durham பகுதிகளும் அடங்குகின்றன.