Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் அதிகரிக்கவுள்ளது.
Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் லிட்டருக்கு 212.9 சதமாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Montreal, Vancouver, Prairie மாகாணங்களிலும் அதிக விலையில் எரிபொருள் விற்பனையாகும் என எதிர்வு கூறப்படுகின்றது.
இந்த கோடையில் ஒரு கட்டத்தில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 225.0 சதம் வரை உயரலாம் என எதிர்வு கூறப்படுகிறது.