Ontario மாகாண சபை தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இது, Ontario மாகாணத்தின் வாக்காளர்களில் 10 சதவீதம் என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்த முற்கூட்டிய வாக்குப்பதிவு 28ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெற்றது.
தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிகளில் மக்கள் தொகையை குறைப்பதற்கு, 10 நாட்கள் முற்கூட்டிய வாக்குப்பதிவு இம்முறை நடைபெற்றது.
Ontario மாகாண சபை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.