தேசியம்
Ontario தேர்தல் 2022கட்டுரைகள்

Ontario தேர்தல் வெல்லப்போவது எங்கே?

Toronto பெரும்பாகமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் Ontario மாகாண சபையின் மொத்த ஆசனங்களில் பாதிக்கு மேலானவற்றை கொண்டுள்ளன. அவை ஒரு கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானவை.

Ontarioவின் ஏனைய பகுதிகளின் வெல்வதற்குக் கடினமான தன்மை காரணமாக Toronto பெரும்பாகத்திலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலுமே தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்தப்படப்போகிறது, வெல்லப்படவும் போகிறது.

மூன்று பெரிய கட்சிகளின் தலைவர்களும் தமது நேரத்தின் பெரும்பகுதியை மாகாண தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செலவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். June 2 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 124 ஆசனங்களில் பாதிக்கு மேற்பட்டவற்றை Toronto பெரும் பகுதியும் Hamilton பிராந்தியமும் கொண்டுள்ளன என்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

கட்சி தலைவர்கள் Toronto பெரும்பாகத்தில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். உண்மையில் Toronto பெரும்பாகம் வழமை போல தேர்தலை தீர்மானிக்கும் இடமாக இருக்கும்.

ஆனால், வெவ்வேறு கட்சிகள் இப்பிராந்தியத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாளக்கூடும்.

Progressive Conservative தலைவர் Doug Ford, 2018 இல் Toronto நகரில் அதிக நேரம் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர் இம்முறையும் அவ்வாரான நகர்வை பின்பற்றுகின்றார்.

(கட்சியின் பாரம்பரிய கோட்டையான) பெரும்பாலான கிராமப்புற தொகுதிகளை கைப்பற்றிக்கொண்டு, Torontoவின் உள்-புறநகர் பகுதிகளையும் அதைச் சுற்றியுள்ள 905 பகுதியையும் கைப்பற்றியதன் மூலம் Progressive Conservative கட்சி கடந்த முறை பெரும்பான்மையைப் பெற்றனர்.

எவ்வாறாயினும், நகர்ப்புறங்கள் எப்போதும்போல் இம்முறையும் அவர்களுக்கு போராட்டமாகத்தான் இருக்கப்போகிறது. அவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வெற்றிபெறாவிட்டால், கிராமப்புறத்தில் பெறும் இடங்களைக் கொண்டு அவர்களால் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆசனங்களை வெல்ல முடியாது போகும்.

அதற்காக புதிய ஜனநாயகக் கட்சியினரும் Liberal கட்சியினரும் அப்பகுதிகளை போராடாமல் விட்டுக்கொடுப்பார்கள் என அர்த்தப்படுத்த முடியாது.

NDP தலைவர் Andrea Horwath, Liberal தலைவர் Steven Del Duca ஆகியோர் Torontoவை சுற்றியுள்ள நகரங்களில் தங்களின் பிரசாரத்தின் முதற்சில நாட்களை செலவிட்டனர்.

COVID பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் நகரமான Bramptonனில் தங்களுக்கான ஆசனங்களைக் கைப்பற்ற NDP உழைக்கும். அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், தேர்தலின்போது சுகாதாரப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Toronto நகரில் உள்ள பல ஆசனங்களுக்காக NDP, Liberal கட்சிகள் கடும் போட்டியில் ஈடுபடுகின்றனர்.

பசுமைக் கட்சியின் தலைவர் Michael Schneiner சட்டசபையில் குறைந்த பட்சமாக இரண்டாவது மாகாண சபை உறுப்பினரை உருவாக்கும் நம்பிக்கையில் இருப்பதால், அவர்கள் கூட Toronto நகர் மையத்தில் பிரச்சாரத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.

2018 தேர்தலில், மாகாணத் தலைநகரின் மையப் பகுதியில் உள்ள ஆசனங்களை NDP கைப்பற்றியது – Liberal கட்சி இம்முறை அங்கு மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளார்கள்.

NDP, Liberal கட்சிகளும் முதல்வர் Doug Fordக்கு எதிரான, முற்போக்கான வாக்குகளை குறிவைத்து தீவிரமான பிரச்சாரத்தில் தொடர்ந்தும் ஈடுபடுவதை காணலாம்.

கடந்த முறை, Progressive Conservative அரசாங்கத்தை தடுக்கும் எதிர்பார்ப்பில், Ford அல்லாத எவருக்காவது வாக்களிக்க (anyone-but-Ford vote) Ontario வாக்காளார்கள் விரும்பியதால் NDP பயனடைந்தது. அந்த வகையான மூலோபாய வாக்களிப்பு, 2018ஆம் ஆண்டில், பல Toronto நகர்ப்புற இடங்களையும், Ottawa Centre போன்ற ஏனைய தொகுதிகளையும் NDP வெல்ல உதவியதாகக் கருதப்படுகிறது.

ஆனால் Fordக்கு எதிரான அந்த உணர்வு (anti-Ford sentiment) இந்த முறை இல்லை, குறைந்தபட்சம் முன்னாள் Liberal முதல்வர் Kathleen Wynneக்கு எதிராக இருந்த அதே அளவிற்கு Fordக்கு எதிரான உணர்வு இருப்பதாக தெரியவில்லை.

குறிப்பாக Fordடை ஏற்காதவர்கள் நிறைய பேர் உள்ளனர், ஆனால் பிரசார காலத்தில் கருத்துக் கணிப்பில் உறுதியான முன்னிலையைப் பெற்றுள்ள Progressive Conservative கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க அவர்கள் இன்னும் தயாராகவே உள்ளனர்.

2018 இல் Wynneனைத் தாக்கிய “உள்ளார்ந்த வெறுப்பு” (visceral contempt), இந்தத் தேர்தலில் ஒரு காரணியாக இருப்பதாக தெரியவில்லை. அதனால் Ford பாதிக்கப்படப்போவதும் இல்லை.

அவதானிக்க வேண்டிய ஏனைய தொகுதிகள்

 முக்கிய தேர்தல் போட்டி இடம்பெறும் பகுதியாக Toronto ருந்தாலும், மாகாணத்தில் வேறு எங்கும் கவனிக்கப்படும் போட்டிகள் இடம்பெறாது என்று சொல்லிவிட முடியாது.

வடக்கு, தென்மேற்கு Ontarioவின் சில பகுதிகளில், குறிப்பாக அப்பிராந்தியங்களில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருந்த NDP, Progressive Conservative கட்சிகளின் சில பிரச்சார நடவடிக்கைகளை அவதானிக்க முடியும். தொழிலாளர் பிரச்சினைகளில் இணைந்துள்ள புதிய ஜனநாயகக் கட்சியிக்கும் சமூக விழுமியங்களை பிரதிபலிக்க முனையும் Progressive Conservative கட்சிக்கும்  இடையில் அத்தொகுதியில் ஊசலாடக்கூடும் என கருத்துக்கணிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

இது மக்கள் யாருடன் தம்மை தொடர்புபடுத்திப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியது. இதனால் Ford நன்மை பெறக்கூடும்.

ஏற்கனவே தான் வைத்திருக்கும் ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதில் கவனத்தை குவிக்கின்றார் Horwath. இதனால் NDP வெல்வதற்கு பெரிதும் உதவப்போவதில்லை என்னும் நிலையில் உள்ள  தொகுதிகள் அவர் கைவிட தொகுதிகளாகவே அர்த்தப்படக்கூடும்.

Torontoவிற்கு வெளியே கவனிக்க வேண்டிய சில பகுதிகள்:

Peterborough-Kawartha: இந்த தொகுதி 1977 ஆம் ஆண்டிலிருந்தே ஒரு முன்னணி குறிகாட்டியாக இருந்து வருகிறது. எனவே அரசியல் காற்று எங்கு வீசுகிறது (bellwether) என்பதற்கான குறிப்புகளை எப்போதும் இங்கே கவனிக்கலாம். இந்த தொகுதியை வெற்றி பெறும் கட்சி தேர்தலிலும் வெற்றிபெறும்.

கிழக்கு Hamilton – Stoney Creek: NDP தலைவர் Horwathதின் சொந்த ஊரான Hamilton, அதைச் சுற்றியுள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளில் நான்கு, புதிய ஜனநாயகக் கட்சியின் செம்மஞ்சள் நிறத்தில் திடமாக உள்ளன. இருப்பினும், NDP மாகாண சபை உறுப்பினராக இருந்த  Paul Miller “சிக்கலுக்குரிய நடத்தை” (pattern of troubling behaviour) காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். Order of Hamilton கௌரவத்தைப் பெற்றவர், முன்னாள் நகர சபை உறுப்பினர், முன்னாள் CFL விளையாட்டு வீரர் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார்கள்.

London North Centre: 2018 இல் NDP இந்த தொகுதியில் திடமான வெற்றியைப் பெற்றிருந்தது. 15 ஆண்டுகளாக தொகுதியை தக்கவைத்திருந்த பிரபல Liberal அமைச்சர் Deb Matthews  மீது அதிருப்தியடைந்த Liberal வாக்காளர்களே அதற்குக் காரணம். தற்போது இந்தத் தொகுதி மீது Progressive Conservative கட்சியினர் கண் வைத்துள்ளனர். தங்களால் கைப்பற்றக்கூடிய ஒரு தொகுதியாக இதனை அவர்கள் பார்க்கின்றனர். இதனால், பிரச்சார காலத்தில் சில தலைவர்களின் வருகையை இத்தொகுதியில் காண முடிந்தது.

Ottawa West-Nepean: 2018 தேர்தலில் இந்தத் தொகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. இது 2018 வரை 15 ஆண்டுகளாக Liberal கோட்டையாக இருந்தது, அப்போது Progressive Conservative வேட்பாளர் புதிய ஜனநாயகக் கட்சியை 175 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். Liberal கட்சி அந்த தொகுதியை மீண்டும் வெல்ல விரும்புகின்றது. அதே சமயம் புதிய ஜனநாயகக் கட்சியினர் இத்தொகுதியில் தமது முதல் வெற்றியை பெறுவதற்கு போட்டியிடுகின்றனர்.

Related posts

அறிவகமும் அரசியலும்!

thesiyam

அடுத்த தேர்தல் தொடர்பில் அமைச்சரவை மாற்றம் கூறுவதும் (கூறாததும்) என்ன?

Gaya Raja

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

Leave a Comment