தேசியம்
செய்திகள்

துப்பாக்கி நபர் Toronto காவல்துறையால் சுட்டுக் கொலை

Torontoவில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியுடன் தெருக்களில் நடந்து சென்றதாக கூறப்பட்ட நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Scarboroughவில் Lawrence Avenue East and Port Union Road சந்திப்புகளுக்கு அருகாமையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை Toronto காவல்துறை உறுதிப்படுத்தியது.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என Toronto காவல்துறை தலைவர் James Ramer இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Toronto காவல்துறை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து SIU எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காவல்துறையினரால் மரணம் அல்லது கடுமையான காயம் விளைவித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை SIU முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது

வியாழக்கிழமை (26) மதியம் 1 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் காரணமாக அருகில் இருந்து பாடசாலைகள் பலவும் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு நிலைகள் நீக்கப்பட்டு பாடசாலைகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் விரைவான நடவடிக்கைக்கு காவல்துறைக்கும் அவசர சேவைகளுக்கு முதல்வர் Doug Ford நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல் போகும் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடிகாரங்களை முன்னோக்கி நகர்த்துகிறது

Lankathas Pathmanathan

தைவான் நில நடுக்கத்தில் காணாமல் போன கனடியர் மீட்கப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment