தேசியம்
செய்திகள்

Monkeypox காய்ச்சலையும் அவற்றின் பரவும் தொடர்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது

கனடாவில் monkeypox காய்ச்சலையும் அவற்றின் பரவும் தொடர்களையும் மத்திய அரசு கண்காணித்து வருவதாக தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

இது ஒரு அசாதாரண சூழ்நிலை என வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

வியாழக்கிழமை கனடாவில் இரண்டு monkeypox தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன.

Quebecகில் monkeypox  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் வியாழன் மாலை அறிவித்தது.

20 சந்தேகத்திற்குரிய தொற்றுக்கள் குறித்து Quebecகில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

British Columbiaவில் சாத்தியமான சில தொடர்புகளை சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருவதாக  Dr. Tam  கூறினார்.

கனடா, அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் monkeypox தொற்றின் பரவல் அறிவிக்கப்படுகிறது

கனடாவில் monkeypox எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை எனவும் Dr.Tam கூறினார்.

பொது மக்களுக்கு monkeypox தொற்றுக்கான ஒட்டுமொத்த ஆபத்து குறைவாக உள்ளது என வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo கூறினார்.

ஆனாலும் அனைவரும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம் எனவும்  அவர் தெரிவித்தார்.

இந்த தொற்றுக்கு எதிரான நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள்  எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Monkeypox காய்ச்சலுக்கு  எதிரான பெரியம்மை தடுப்பூசிகளின் செயல்திறனை மறுபரிசீலனை செய்வது குறித்து கனடாவிலும் வெளிநாடுகளிலும் விவாதங்கள் நடந்து வருவதாகவும் Dr.Tam தெரிவித்தார்.

இந்த மாத ஆரம்பத்தில் 500 ஆயிரம் பெரியம்மை தடுப்பூசிகளை பெறுவதற்கான ஒழுங்குகளை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் monkeypox காய்ச்சலுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.

ஆனாலும் இந்த தடுப்பூசிகள் அடுத்த வருடம் April மாதம் வரை கனடாவை வந்தடையாது என தெரியவருகின்றது.

கனடாவில் தற்போது இந்த தடுப்பூசியின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை கைவசம் வைத்துள்ளதாக Dr.Tam தெரிவித்தார்.

ஆனாலும் பாதுகாப்பு காரணங்களால் கைவசம் உள்ள தடுப்பூசியின் சரியான எண்ணிக்கையை வெளியிட முடியவில்லை என அவர் கூறினார்.

கனடாவில் கைவசம் கொண்டுள்ள இந்த  தடுப்பூசிகள் பொது மக்களுக்குக் கிடைக்காது எனவும் அவர் அதிக ஆபத்தில் இருப்பதாக தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Related posts

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு அழைப்பு

Lankathas Pathmanathan

மற்றுமொரு வட்டி விகித குறைப்பை அறிவித்த மத்திய வங்கி

Lankathas Pathmanathan

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment